இன்றைய ஆட்சி நமக்குக் கிடைக்கக் கூடாத ஆட்சி அருமையான ஆட்சி. இந்தியாவிலேயே இதுபோன்ற ஆட்சி கிடையாது. இது பகுத்தறிவாளர்கள் ஆட்சி. இதுவரையிலும் இது போன்ற ஆட்சி அமைந்தது கிடையாது. புராணங்களில் சொல்ல வேண்டுமானால் இராவணன், இரணியன் இவர்களின் ஆட்சியைத் தான் சொல்ல வேண்டும்.இரணியனுடைய ஆட்சியில் தான் பார்ப்பானையெல்லாம் கண்ட இடத்தில் கொல்வது அக்கிரகாரத்திற்கு எல்லாம் நெருப்பு வைப்பது பார்ப்பான் எங்கெங்கு யாகம் சந்தியா வந்தனம் செய்தானோ அங்கெல்லாம் போய் அவன் தலையை வெட்டுவது, பிக்காஸ் மண்வெட்டியைக் கொண்டு கோயில்களை இடிப்பது போன்ற காரியங்களைச் செய்திருக்கின்றான்.
இந்தக் காரியங்களைச் செய்ததைத் தவிர அவன் வேறு எந்தத் தீமையையும் மக்களுக்குச் செய்யவில்லை என்றாலும் கடவுள் அவதாரம் எடுத்து வந்து அவனைக் கொன்றார் என்று கதை எழுதி வைத்திருக்கின்றான். பார்ப்பனருக்கு விரோதமாகச் சமூதாய சம்பந்தமானவற்றில் மாறுதல் ஏற்பட வேண்டுமென்று எவன் நினைத்தாலும் அவனுக்கு இந்தக் கதி தான் ஏற்படும் என்பதைக் காட்டவே இப்படிக் கதை எழுதி வைத்திருக்கின்றான். அதன் பிறகு வந்த அரசர்கள் ஆட்சியானது மனுதருமப்படியே நடைபெற்று வந்தது.
சுமார் 20, 30 வருடங்களுக்கு முன் எல்லா ஊர்களிலும் நாடகம் நடக்கும். அதில் அரசன் மந்திரியைக் கேட்பான். முதல் கேள்வி மழை பெய்ததா? என்பான். அடுத்துப் பார்ப்பனர்கள் எவ்விதக் குறைவுமின்றி வாழ்கின்றனரா? அவர்களுக்கு எவ்விதத் தொல்லையும் இல்லாமல் வாழ்ந்து வருகின்றனரா? என்று கேட்பான். அடுத்து சூத்திரர்கள் எல்லாம் பார்ப்பானுக்குத் தொண்டுழியம் செய்து வருகின்றனரா? அவர்கள் படிக்காமல் பார்த்துக் கொள்ளப்படுகிறதா? என்று கேட்பான். இது வசனமாக இருந்தாலும் உண்மை நிலை அப்படித்தான் இருந்தது. அரசனின் கடமையே கடவுள் - மதம் -ஜாதி - சாஸ்திரம் ஆகியவை காப்பாற்றப்பட வேண்டும். மனுதருமப்படி ஆட்சி செய்ய வேண்டுமென்பதேயாகும். இது எதுவரை இருந்ததென்றால் நேற்றுக் காங்கிரஸ் தோற்றதே அன்று வரை நடைபெற்ற ஆட்சி மனுதரும ஆட்சியேயாகும்.
வெள்ளைக்காரன் ஆட்சி இங்கு நடைப்பெற்ற போது தன் நாடு போல ஆட்சி செய்ய வேண்டுமென்று கருதினான். ஆனாலும் மனுதருமப்படி ஆட்சி நடத்தும்படிச் செய்து விட்டனர் பார்ப்பனர். வெள்ளைக்காரனுடைய ஆட்சியை ஆதரித்ததன் முலம் பார்ப்பான் பெரும் பதவிகளைப் பெற்றான். அதைப் பார்த்துத் துலுக்கரும் பங்கு கேட்டு உத்தியோகங்களில் பங்கு பெற்றனர். இதைக் கண்ட பின் தான் பார்ப்பனரல்லாத தமிழன் தானும் பதவி உத்தியோகங்களில் பங்கு பெற வேண்டுமென்கின்ற உணர்ச்சி கொண்டு தென்னிந்தியர் நல உரிமைச் சங்கம் (ஜஸ்டிஸ் கட்சி) என்பதாக ஓர் இயக்கத்தை ஏற்படுத்திப் பதவி உத்தியோகங்களில் தங்களுக்கும் பங்கு கொடுக்க வேண்டுமென்று கேட்டதும் (பார்ப்பனர்) காங்கிரஸ் மக்களிடையே ஜஸ்டிஸ் கட்சி பதவி வேட்டைக் கட்சி ஒன்றுதான் மக்கள் நலனுக்காகத் தொண்டாற்றும் கட்சி காங்கிரஸ்காரர்களாகிய நாங்கள் பதவி உத்தியோகங்களை விரும்பாதவர்கள் என்று சொல்லிப் பிரசாரம் செய்ததோடு தாங்கள் சகித்த பதவி உத்தியோகங்களை ராஜிநாமா செய்ததோடு கல்லூரிப் படிப்பையும் பகிஷ்கரித்தனர். இதைக் கண்டபின் நான் கூட காங்கிரசில் சேர்ந்தேன்.
உங்கள் ஊர்பக்கம் பிச்சைக்காரர்கள் இருப்பார்கள். கோயில் படிக்கட்டில் உட்கார்ந்து கொண்டு ரோட்டில் போகிறவனை உன்னைப் பழனியாண்டி கூப்பிடுகிறான் வா என்பான். அவன் வந்ததும் பழனியாண்டி உன்னிடம் ஒரு பைசா கேட்கச் சொன்னான் என்பான். அவன் ஒரு பைசாவைக் கொடுத்து விட்டுப் போனதும் அவன் கொஞ்சம் தூரம் போய்க் கொண்டிருக்கும் போதே பிச்சைக்காரன் திரும்பவும் கூப்பிட்டுப் பழனியாண்டி இதை என்னிடமே கொடுக்கச் சொல்லிவிட்டான் என்று பைசாவைத் திருப்பிக் கொடுப்பான் இப்படி ஓரணா, சாலணா என்று பழனியாண்டி கேட்டான் திருப்பிக் கொடுக்கச் சொன்னான் என்பான். இரண்டு மூன்று தரம் இப்படிச் செய்து விட்டுக் கடைசியாகப் பழனியாண்டி உன்னிடம் ஒரு ருபாய்க் கேட்கிறான் என்றதும் இவன் திரும்பக் கொடுத்துவிடுவான் என்கின்ற எண்ணத்தில் வழிப்போக்கன் ஒரு ரூபாய்க் கொடுத்துவிட்டு இவன் திரும்பக் கூப்பிட்டுக் கொடுப்பான் என்று தயங்கித் தயங்கி மெதுவாக நடந்து கொண்டிருப்பான் இதைப் பார்த்த பிச்சைக்காரன் பழனியான்டி இதை என்னையே வைத்துக் கொள்ளச் சொல்லிவிட்டான். நீ போகலாம் என்று சொல்வான்.
அது போலத்தான் இந்தக் காங்கிரஸ்காரர்கள் மக்களுடைய ஆதரவு கிடைக்கிறவரை நாங்கள் தேர்தலில் நிற்க மாட்டோம் என்று சொல்லிக் கொண்டிருந்தவர்கள் மக்களின் ஆதரவு கிடைத்ததும் எப்படிப் பிச்சைக்காரன் ஒரு ருபாய் கிடைத்ததும் பழனியாண்டி தன்னை எடுத்துக் கொள்ளச் சொன்னான் என்றானோ அதுபோல நேரு சொன்னார் - காந்தி சொன்னார் என்று தேர்தலில் நிற்பது என்று ஆரம்பித்தார்கள். தேர்தலில் நிற்பது என்று முடிவு செய்தால் பார்பனரல்லாதாருக்கு என்று 100 - க்கு 50 - ஸ்தானங்கள் ஒதுக்கி வைத்து விட்டு மீதி 50 - ஸ்தானங்களில் தான் மற்றவர்கள் போட்டியிட அனுமதிக்க வேண்டும். இதற்கு ஒப்புக் கொண்டால் தான் தேர்தலுக்கு நிற்பதை நான் ஒப்புக் கொள்வேன் என்று சொன்னேன். என் இந்தத் திட்டத்தை அவர்கள் ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டனர். உடனே நான் காங்கிரசைவிட்டு வெளியேறி சுயமரியாதை இயக்கத்தை ஆரம்பித்து அதன் கொள்கையாக கடவுள் ஒழிக! - மதம் ஒழிக! - சாஸ்திரம் ஒழிக! - சாதி ஒழிக! இவற்றைக் காப்பாற்றுகிற காங்கிரஸ் ஒழிக! காந்தி ஒழிக! என்று பிரசாரம் செய்து கொண்டு வருவதோடு மனித சமூதாயத் தொண்டாற்றி வருகின்றேன்.
நம் மக்கள் பல ஆயிரக்கணக்கான வருடங்களாகத் தங்கள் உரிமையை இழந்து பார்ப்பனர்களுக்கு அடிமையாகி சூத்திரர்களாக - இழி மக்களாக - நாலாம் ஜாதிக்காரர்களாக - மானமற்ற மக்களாக - தீண்டத்தகாதவர்களாக நடத்தப்பட்டு மதிக்கப்பட்டு வருகின்றனர். நம் மக்கள் இப்படி நடத்தப்படுவதற்கு அடிப்படைக்காரணங்களாக இருப்பவை நம் கடவுள் (மதம் -சரித்திரம் - புராணம் - ஜாதி ஆகியவையே ஆகும். இவையாவும் ஒழிக்கப்பட்டால் தான் மனிதன் இழிவற்று கீழ்வாதித் தன்மையற்று வாழ முடியும். மற்ற உலக மக்களைப் போல் சமத்துவமாக முன்னேற்றமாக வாழ முடியும் என்பதாலேயே கடவுள் -மத - சரித்திரங்கள் ஒழிக்கப்பட வேண்டுமென்று திராவிடர் கழகம் தொண்டாற்றிக் கொணடு வருகிறது.
எந்தக் கடவுள் உன்னைச் சூத்திரன் என்கின்றதோ, அந்த கடவுளை நீ கும்பிடுகிறாய். எந்த மதம் உன்னைச் சூத்திரனாக வைத்திருக்கின்றதோ அந்த மதத்தைப் பின்பற்றி அதன்படி நடந்து கொண்டு நான் சூத்திரன் என்பதைக் காட்டிக் கொள்வது போல நெற்றியிலே மதக்குறியை இட்டுக் கொண்டால் எப்படி உன் சூத்திரத் தன்மைப் போகும்? நீங்கள் இந்தக் கோயில் குட்டிச் சுவருக்குப் போய் வெளியே நின்று கொண்டு கன்னத்தில் போட்டுக் கொண்டு பார்ப்பானைப் போய் சாமி என்று கூப்பிட்டுக் கொண்டிருந்தால் நீங்கள் மட்டுமல்ல உங்கள் பிள்ளைக் குட்டி, பேரன், பேத்தி, பிதுர்கள் எல்லாம் சூத்திரர்கள் ஆக வாழ வேண்டியவர்கள் தானே?
பார்ப்பான் நன்றாகத் தெரிந்து கொண்டு இருக்கின்றான். இந்தச் சாமி இருக்கிற வரை எத்தனை பேர்கள் பாடுபட்டாலும் சூத்திரத் தன்மையை ஒழிக்க முடியாது என்பதால் பார்ப்பான் கடவுள், மத பிரசாரத்தில் கிளம்பி விட்டான். இப்போது எங்கு பார்த்தாலும் கதா காலட்சேபங்களும் பழைய கோயில்களைப் புதுப்பிப்பதும், கும்பாபிஷேகம் நடத்துவதுமான காரியங்களில் ஈடுபட்டு நம் மக்களைச் சிந்திக்க ஒட்டாமலும் அறிவுபெற ஒட்டாமலும் தடுக்கின்றனர். இதைப் புரிந்து கொள்ள முடியாது நம் மக்கள் அதற்கு ஆளாகி நம்மையே எதிர்க்கின்றனர்.
நம் மக்கள் கடவுள் அமைப்புப்படி - மதப்படி மட்டும் சூத்திரர்களாக இல்லை. இன்றைய இந்து சட்ட (இந்துலா) ப்படி நாம் சூத்திரர்கள் தான். இன்றைக்கு இங்கிருக்கிற காலேஜிக்குப் போனேன். அங்கு அமைச்சர் வந்திருந்தார் என்றாலும் அமச்சர் முதல் நான் உட்பட அங்கிருந்த எல்லோரும் சூத்திரர்கள் தானே! இரண்டு மூன்று பார்ப்பான் இருக்கலாம். அவனைத் தவிர அங்கு இருந்த அத்தனைப் பேர்களும் சூத்திரர்கள் தானே! அங்குக் கடவுள் வாழ்த்து என்று எதையோ உளறினான். பொது இடமானதால் நானும் அதற்கு மதிப்பு கொடுக்க வேண்டியதாயிற்று. நம் உணர்ச்சி காரணமா இப்போது கடவுள் வாழ்த்தாகக் குறளில் ஒன்றிரண்டைச் சொல்கின்றனர் என்றாலும் இது முட்டாள்தனமேயாகும்.
நம் தோழர்கள் இங்குக் கடவுள் மறுப்புச் சொன்னார்கள் என்றால் தங்கற் அறிவுப்படி ஆராய்ந்து தெரிந்து கொண்ட உண்மையைத்தான் சொன்னார்கள். நீங்கள் உங்களிடமிருக்கும் மூட நம்பிக்கையை விட்டு கடவுள் என்றால் என்ன? அதற்கும் மனிதனுக்கும் என்ன சம்பந்தம்? எதற்காக மனிதனுக்குக் கடவுள் தேவை? என்பவற்றையெல்லாம் அறிவைக் கொண்டு எந்தப் பற்றுமில்லாமல் சிந்திப்பீர்களானால் உங்களுக்கும் இந்த எண்ணம் தான் தோன்றும். சிந்திக்கத் துணியாத காரணத்தால் தான் கடவுள் நம்பிக்கை மக்களிடமிருக்கின்றது. அதைப் பார்ப்பான் பயன்படுத்திக் கொள்கின்றான்.
இன்றைக்குப் பத்திரிக்கையிலே வந்திருக்கிறது. மேல் நாட்டில் சந்திர மண்டலத்தைச் சுற்றிக் கொண்டிருந்தவன் சந்திரனைப் பலமுறைச் சுற்றிவிட்டு இன்று பூமியில் இறங்கியிருக்கிறான் என்று. ஆனால் நம் நாட்டில் நம்மவன் என்னடா என்றால் கோயிலுக்குப் போய் நவக்கிரகத்தைச் சுற்றுகிறான். என்னடா சுற்றுகிறாய் என்றால் சந்திரன், சூரியன், சனியைச் சுற்றுகிறேன் என்கிறான். இப்படிக் குழவிக் கல்லைச் சுற்றிக் கொண்டிருந்தால் நாம் என்றைக்கு மேல் நாட்டுக்காரனைப் போலச் சந்திரனைச் சுற்றுவது? அவனும் நம்மைப் போன்ற மனிதன் தான். அவனால் மட்டும் இது எப்படிச் சாத்தியமாகிறது என்றால் கடவுள் நம்பிக்கையை விட்டு சிந்தித்தாலே ஆகும்.
இன்றைக்கிருக்கிற இந்த ஆட்சி மீண்டும் வந்தால் கோயிலில் செய்கிற பூசையையெல்லாம் நிறுத்திவிடும். நம் நாட்டில் இன்னும் கட்ட வேண்டிய பள்ளிக்கூடங்கள் ஆஸ்பத்திரிகள் நிறைய இருக்கின்றன. இந்தக் கோயில் குட்டிச் சுவர்களுக்குச் செய்யும் செலவை இவற்றிற்குப் பயன்படுத்தினால் மக்களுக்குப் பலன் ஏற்படும். கடவுள் நம்பிக்கை என்பது மற்றவர்களை ஏமாற்றத்தானே தவிர உண்மையில் இல்லை. எந்தக் கடவுள் நம்பிக்கைக்காரனும் தனக்கு நோய்வந்தால் டாக்டரிடமும், வைத்தியனிடமும் போகிறானே தவிர எவனும் கடவுளால் தான் தனக்கு நோய் ஏற்பட்டது என்று கருதி வைத்தியம் செய்யாமலிருப்பது கிடையாது. கடவுள் கதைகள் எழுதப்பட்ட காலம் காட்டுமிராண்டிக் காலம் ஆனதால் கடவுள் கதைகள் என்பவை எல்லாம் ஆபாசம் நிறைபியனவாக இருக்கின்றன.
நம் புராணங்கள், இதிகாசங்கள் மனிதத்தன்மை ஏற்படாத காலத்தில் எழுதப்பட்டவை. மனிதன் தாய், அக்கால், தங்கை என்கின்ற வித்தியாசம் தெரியாமல் இருந்த காலத்தில் எழுதப்பட்டவையாகும். இராமாயணத்தில் மட்டும் தான் பிராமணன் - சூத்திரன் என்றிருக்கிறது. மற்ற புராணங்களில் எல்லாம் தேவர் - அசுரர் என்றே குறிப்பிடப்பட்டிருக்கிறது. தேவர் என்பது பார்ப்பானையும் அசுரர் என்பது திராவிட (தமிழ)னையும் குறிப்பதேயாகும். சமுதாயத்துறையில் முன்னேற்றமடைய வேண்டுமானால் கொல்ல வேண்டும். கொலை செய்யப்பட வேணடும். பார்ப்பான் எப்படித் தன் சமூதாயத்தை காப்பாற்றிக் கொள்வதற்காக நம்மையெல்லாம் கொன்றிருக்கின்றானோ அது போல நாமும் துணிய வேண்டும்.
இந்த ஊரிலுள்ள ( காஞ்சிபுரம்) கோயிலைப் போய்ப் பார்த்தாலலே தெரியும். பகுத்தறிவுப் பிரசாரம் செய்த சமணனைக் காலை ஒருத்தனும் தலையை ஒருத்தனும் பிடித்துக் கொண்டிருக்கிறான். இன்னொருவன் அவனை வெட்டுவது போல சிலை செய்து வைத்திருக்கின்றான். உலகத்திலே இல்லாத முட்டாள் அகிம்சைவாதி நடக்கும் போதே தரையைக் கூட்டிக் கொண்டு நடப்பான். ஈ, எறும்பு காலில் பட்டுச் சாகக் கூடாது. தன்னால் எந்தச் சிறு ஜீவனுக்கும் தொந்தரவு ஏற்படக் கூடாது என்று கருதி வாழ்ந்து வந்தவர்கள் ஜெயினர்கள், அருகர் மதத்தைச் சார்ந்தவர்கள். அவர்கள் பகுத்தறிவைப் பரப்பினார்கள் என்பதால் பார்ப்பனர்களால் கொலை செய்யப் பட்டிருக்கின்றனர். இன்றைக்கும் மதுரை போன்ற பெரிய கோயில்களில் சமணரைக் கழுவேற்றிய திருவிழா நடைபெறுகிறது.
பார்ப்பான் ஏன் லஞ்சம் வாங்குகிறான் என்றால் சூத்திரனிடமிருக்கிற பணத்தை எந்தவிதத்திலும் பார்ப்பான் பிடுங்கிக் கொள்ள உரிமை உண்டு என்பது மனுதர்மமாகும். எனவே மனுதர்மப்படி அவன் இலஞ்சம் வாங்குவது என்பது குற்றமில்லையானதால் துணிந்து வாங்குகின்றான். மேலேயும் பார்ப்பான் இருப்பதால் இவனைத் தப்பிக்கச் செய்து விடுகின்றான். இந்தத் தெருக்கெல்லாம் தீ வைக்கும்படியான காலம் வரும். இந்தக் கோயில்களை எல்லாம் வெடிகுண்டு வைத்து உடைக்கும்படியான காலம் வரும். அந்தக் காலத்தில் தான் நாம் சூத்திரத் தன்மையற்ற மக்களாக ஆவோம்.
(13-03-1969 அன்று காஞ்சீபுரத்தில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு)




5 comments:
tamilmanam gone just now
இப்படியே தொடர்ந்தாலே போதும் (பெரியாரை பற்றி). எதுக்கு நமக்கெல்லாம் வம்பு சண்டை
Comments - Show Original Post
Collapse comments
Anonymous said...
tamilmanam gone just now
/// பிளேடு பக்ரி said...
இப்படியே தொடர்ந்தாலே போதும் (பெரியாரை பற்றி). எதுக்கு நமக்கெல்லாம் வம்பு சண்டை ///
ஆதிக்கப் போக்கும் அடிமைத் தனத்தின் வெளிப்பாடும் என்ற பதிவை எழுதியது நீங்கள் தானே! எழுத்தில் மட்டும் தான் உங்கள் செயல்பாடா?
அதைரியப்படுத்துபவர்களை என்றும் நான் மதிப்பதில்லை. உலகில் மிகச் சுலபமாகவும், இலவசமாகவும் கிடைக்கக் கூடிய ஓரே பொருள் அறிவுரை தான்.
இடிப்பாரை இல்லா ஏமரா மன்னன்
கெடுப்பாரினுங்க் கெடும்.
இது திருக்குறள்.
ஒரேயடியாக அறிவுரை தேவையில்லை என்று சொல்லக்கூடாது.
அறிவுரையை கேட்டுக்கொண்டு..பிறகு நம் மனம் போல நடக்கலாம்.
தப்பில்லை.
/// V.Radhakrishnan said...
இடிப்பாரை இல்லா ஏமரா மன்னன்
கெடுப்பாரினுங்க் கெடும்.
இது திருக்குறள்.
ஒரேயடியாக அறிவுரை தேவையில்லை என்று சொல்லக்கூடாது.
அறிவுரையை கேட்டுக்கொண்டு..பிறகு நம் மனம் போல நடக்கலாம்.
தப்பில்லை.///
தப்பை தப்பில்லை என்று சொல்வதே பெரிய தப்புதான். சமூகச் சூழல் நம்மை அப்படி சிந்திக்க வைக்கின்றது.தேவையில்லாமல் மற்றவர்களுக்கு அறிவுரை சொல்வதை அய்ரோப்பியர்கள் அநாகரிகமாக எண்ணுவார்கள். அதுவும் நாம் செயல்படுவது இணையத்தில். அதனால் மிகுந்த எச்சரிக்கைகளுடனே செயல்பட வேண்டிருப்பதால் அந்த கருத்தை சொன்னேன். நமக்கு அறிவுரை தேவையென்றால் நமக்கு அறிவுரை சொல்லும் தகுதியும், திறமையும் இருப்பவரிடம் ஆலோசனை கேட்பதில் தவறில்லை. அதில் எனக்கும் உடன்பாடு உண்டு.
Post a Comment